Monday, May 31, 2010

முட்டாள்தனத்தின் விளைவு

 மிகச்சிறிய காரில் 8 பேர் பயனித்தல் என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. விபத்து ஏற்படலாம் என்பது தெரிந்தும் பயணிப்பது என்பது திமிர். மேலும் அளவுக்கு  மிஞ்சிய வேகத்தில் செல்வது ஒன்றும் விவேகம் அல்ல. மே 29 , 2010 அன்று கோவையில்  இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் நான்கு பேர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய மிகச் சிறிய காரில் திருப்பதி   சென்று திரும்பும்போது, சித்தூர்  அருகே அதி வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து 5 பேர் சம்பவம் நடந்த இடத்திலயே உயிர் இழந்தனர். இரு குழந்தைகளும் ஒரு பெண்ணும் மட்டுமே உயிர் பிழைத்தனர். காரில் தொலைதூர பயணம் செல்லும் முன் அதன் தகுதி மற்றும் ஓட்டுனரின் திறமை ஆகியவற்றையும் மனிதில் கொள்ளவேண்டும். இனிய பயணம் இல்லாப்பயனமாக மாறக்கூடாது.

Monday, February 22, 2010

இரயில் பயணம்..

நான் சென்ற வாரம் இரயில்  மூலம் கேரளா சென்றிருந்தேன். இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி(?????). ஒவ்வொரு முறை செல்லும்போதும்  என்னால் கோபப்படாமல் இருக்க முடிவதில்லை. இம்முறையும் அப்படித்தான், சென்னையில் இருந்து செல்லும்போது இளவட்ட கும்பல் ஒன்று பொது  இடம் என்பதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் அடித்த லூட்டி மிகவும் கொடுமையாக இருந்தது. குறிப்பாக ஆண் மற்றும் பெண் நண்பர்கள் சேர்ந்து செல்லும்போது கேட்கவே வேண்டாம், தேவை  இல்லாமல் கத்திப்பேசுவது, ஒன்றும்  இல்லாத விஷயங்களுக்கெல்லாம் கைகொட்டி சிரிப்பது, ஒருவரை ஒருவர் துரத்துவது போன்ற செயல்களுக்கு எல்லையே இல்லை. இத்தனையும் நான் சொல்வது இரவுப்பயனதின்போதுதான். மற்ற பயணிகள் எல்லாம் படுத்து உறங்கத்துவங்கிய  பிறகும் இவர்களது அட்டகாசம் அடங்கவில்லை. இதில் வருந்தத்தக்க விஷயம் சக பயணிகள் யாரும் இதைக் கண்டுகொள்ளததுதான். இத்தனைக்கும் TTE மிக  அருகிலேயே இருந்தும் கண்டுகொள்ளவே இல்லை. தனக்கு இதில் சிறிதும் சம்மந்தம் இல்லததுபோல் அவர் தனது  படுக்கையை விரித்துக்கொண்டிருந்தார். திரும்ப சென்னை வரும்போது தமிழ் நாட்டைச சேர்ந்த ஒருவர் தனது செல் போன் மூலம் மிக மிக அதிக சத்தத்துடன் பாட்டுக்களை கேட்டுக்கொண்டு வந்தார். இவர்கள் எல்லாம் எப்போதுதான் திருந்துவார்கள். ?(கட்டையால் தலையில்  அடிக்கலாமா???)

Thursday, February 4, 2010

இசைசித்தன்...

இசைஞானி இளையராஜா அவர்களுக்கு பத்மபூஷன் விருது ஒருவழியாக வழங்கப்பட்டுவிட்டது. இது காலம் கடந்த ஞானமா? அல்லது நிர்பந்தமா? என்னைக்கேட்டால் ராஜாவுக்கு விருது கொடுக்கும் அருகதை இந்தியாவில் ஒருவருக்கும் இல்லை என்பேன். உலகின் மிகப்பெரிய விருதான மேஸ்ட்ரோ விருது பெற்றவருக்கு இது ஒன்றும் பெரிதில்லை. அவர் ஒரு ஞானி மட்டுமல்ல. "இசை சித்தரும்கூட". இதில் கொடுமை என்னவென்றால் AGENT மூலம் விருதுகள் பெறுபவர்களுக்கும் மீண்டும் ஒரு விருது கொடுக்கப்பட்டதுதான். இது இசைஞானியை சிறுமைபடுத்தும் ஒரு செயலாகும். அவரும் இதையெல்லாம் எதிர் பார்ப்பவரும் அல்ல.  இசையை இசையாக மட்டுமே கண்டு, உணர்ந்து, தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற விரும்பும்  ஒரு உண்மைக் கலைஞன். வேறு என்ன வேண்டும்????

Friday, January 29, 2010

Wayanad trip

We had been to wayanad (8 of us all our family members) during 24th to 26th Jan 2010. It was a wonderful trip (trek??) ofcourse. There we had very good moments in the evenings with different activities. Excellent climate. Good food. Pure air. There are lot more to add. But the thing is you should have atleast a week's holiday to explore entire wayanad. There are lot of places to see but you need time and energy. Covering many places in a day or two is very exhaustive. A wonderful place to relax. To see the photos taken at wayanad please follow the  link below;

http://picasaweb.google.com/esve1969/Wayanad#5431740907056426626

Thursday, January 21, 2010

ஹெல்மெட்

ஹெல்மெட்  அணிவதுபற்றி என் நண்பர்களிடம் கேட்டபோது ஒருவர் "இதுவரை என்னை போலீஸ் பிடித்தது இல்லை".  மற்றொருவர் "ரெடியாக வைத்திருப்பேன் போலிசை கண்டதும் தலையில் மாட்டிக்குவேன்" . " என் தலை  கலைஞ்சுரும்". வேறொரு நண்பர் " ஹெல்மெட் அணியுமாறு கட்டாயப்படுத்துவது கொஞ்சமும் நியாயமில்லை",  " எனக்கு தலைவலி வரும்" ,  இப்படியெல்லாம் சில பதில்கள்.  ஆனால் ஒருவர் கூட அதன் முக்கியத்துவத்தை உணரவில்லை என்பதுதான் உண்மை. ஹெல்மெட் தன் தலையையோ அல்லது உயிரையோ காக்கும் என்று ஒருவர் கூட சொல்லவில்லை என்பதுதான் வருந்தத்தக்க விஷயம்.
தலையே இழந்தபிறகு தலைமுடி கலைந்தால் என்ன? தலை  வலிதான் வந்தால் என்ன?
HELMET or  MET WITH HELL ???!!!! அய்யா..... சட்டம் கொண்டுவந்தது உன் உயிரைக் காக்கத்தான். இனியாவது திருந்துங்கள். PLEASE ......

Thursday, January 14, 2010

கல்வராயன் பயணம்

மூன்று மாதங்களுக்கு ஒரு முறையேனும் நானும் என் நண்பர்களும் ஏதேனும் ஒரு இடத்திற்கு சுற்றுலா செல்வது வழக்கம். கடந்த ஜனவரி 1  ஆம்      தேதி  நானும் நண்பர் நாகராஜன் மற்றும் சாய்ராஜ் ஆகியோருடன் கல்வராயன் மலைக்குச் சென்றிருந்தோம். நல்ல ரம்மியமான சூழ்நிலை, சுத்தமான காற்று, வெகுளியான மக்கள், நல்ல வரவேற்பு.  மாலையில்  சற்றே காலாற நடந்தோம். விதவிதமான செடிகள், மரங்கள், பூக்கள், நீரோடைகள், இடையே சில பன்றிகளும் உண்டு. சுத்தமான காற்றை சுவாசிக்கும்போது மிகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பதை நன்றாக உணர முடிந்தது.  அடுத்த நாள்  திரு. ஏசுராஜன் அவர்களின்  நண்பருடைய  வாகனத்தில் நண்பர் குரு அவர்களின் இல்லத்திற்குச் சென்றோம். நல்ல சுவையான மதிய உணவு அளித்தார். (அன்புத்தொல்லை சற்றே அதிகமோ? ). ஓய்விற்குப்பிறகு கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னைக்குப் புறப்பட்டோம்.
புகைப்படங்களுக்கு http://picasaweb.google.com/esve1969/Kalvarayan#.
நன்றி!

Wednesday, January 13, 2010

Hello Friends..!

It's  me again. After a long fortnight of official engagements, little bit of relief today.

Next four days are holidays due to festivals and weekend. Planning to share  my experience. Please wait for a day. I will come back soon.

Yours loving,

Venky