Monday, February 22, 2010

இரயில் பயணம்..

நான் சென்ற வாரம் இரயில்  மூலம் கேரளா சென்றிருந்தேன். இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி(?????). ஒவ்வொரு முறை செல்லும்போதும்  என்னால் கோபப்படாமல் இருக்க முடிவதில்லை. இம்முறையும் அப்படித்தான், சென்னையில் இருந்து செல்லும்போது இளவட்ட கும்பல் ஒன்று பொது  இடம் என்பதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் அடித்த லூட்டி மிகவும் கொடுமையாக இருந்தது. குறிப்பாக ஆண் மற்றும் பெண் நண்பர்கள் சேர்ந்து செல்லும்போது கேட்கவே வேண்டாம், தேவை  இல்லாமல் கத்திப்பேசுவது, ஒன்றும்  இல்லாத விஷயங்களுக்கெல்லாம் கைகொட்டி சிரிப்பது, ஒருவரை ஒருவர் துரத்துவது போன்ற செயல்களுக்கு எல்லையே இல்லை. இத்தனையும் நான் சொல்வது இரவுப்பயனதின்போதுதான். மற்ற பயணிகள் எல்லாம் படுத்து உறங்கத்துவங்கிய  பிறகும் இவர்களது அட்டகாசம் அடங்கவில்லை. இதில் வருந்தத்தக்க விஷயம் சக பயணிகள் யாரும் இதைக் கண்டுகொள்ளததுதான். இத்தனைக்கும் TTE மிக  அருகிலேயே இருந்தும் கண்டுகொள்ளவே இல்லை. தனக்கு இதில் சிறிதும் சம்மந்தம் இல்லததுபோல் அவர் தனது  படுக்கையை விரித்துக்கொண்டிருந்தார். திரும்ப சென்னை வரும்போது தமிழ் நாட்டைச சேர்ந்த ஒருவர் தனது செல் போன் மூலம் மிக மிக அதிக சத்தத்துடன் பாட்டுக்களை கேட்டுக்கொண்டு வந்தார். இவர்கள் எல்லாம் எப்போதுதான் திருந்துவார்கள். ?(கட்டையால் தலையில்  அடிக்கலாமா???)

No comments:

Post a Comment