Monday, May 31, 2010

முட்டாள்தனத்தின் விளைவு

 மிகச்சிறிய காரில் 8 பேர் பயனித்தல் என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. விபத்து ஏற்படலாம் என்பது தெரிந்தும் பயணிப்பது என்பது திமிர். மேலும் அளவுக்கு  மிஞ்சிய வேகத்தில் செல்வது ஒன்றும் விவேகம் அல்ல. மே 29 , 2010 அன்று கோவையில்  இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் நான்கு பேர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய மிகச் சிறிய காரில் திருப்பதி   சென்று திரும்பும்போது, சித்தூர்  அருகே அதி வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து 5 பேர் சம்பவம் நடந்த இடத்திலயே உயிர் இழந்தனர். இரு குழந்தைகளும் ஒரு பெண்ணும் மட்டுமே உயிர் பிழைத்தனர். காரில் தொலைதூர பயணம் செல்லும் முன் அதன் தகுதி மற்றும் ஓட்டுனரின் திறமை ஆகியவற்றையும் மனிதில் கொள்ளவேண்டும். இனிய பயணம் இல்லாப்பயனமாக மாறக்கூடாது.