Thursday, February 4, 2010

இசைசித்தன்...

இசைஞானி இளையராஜா அவர்களுக்கு பத்மபூஷன் விருது ஒருவழியாக வழங்கப்பட்டுவிட்டது. இது காலம் கடந்த ஞானமா? அல்லது நிர்பந்தமா? என்னைக்கேட்டால் ராஜாவுக்கு விருது கொடுக்கும் அருகதை இந்தியாவில் ஒருவருக்கும் இல்லை என்பேன். உலகின் மிகப்பெரிய விருதான மேஸ்ட்ரோ விருது பெற்றவருக்கு இது ஒன்றும் பெரிதில்லை. அவர் ஒரு ஞானி மட்டுமல்ல. "இசை சித்தரும்கூட". இதில் கொடுமை என்னவென்றால் AGENT மூலம் விருதுகள் பெறுபவர்களுக்கும் மீண்டும் ஒரு விருது கொடுக்கப்பட்டதுதான். இது இசைஞானியை சிறுமைபடுத்தும் ஒரு செயலாகும். அவரும் இதையெல்லாம் எதிர் பார்ப்பவரும் அல்ல.  இசையை இசையாக மட்டுமே கண்டு, உணர்ந்து, தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற விரும்பும்  ஒரு உண்மைக் கலைஞன். வேறு என்ன வேண்டும்????

1 comment: